Entertainment
›
Cine News
›
Kanja karupu anger on Vivek | கஞ்சா கருப்பு வாய்ப்பை பறித்த ஆபாச காமெடியன்
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை திறனால் முன்னேறி வந்து கொண்டிருப்பவர் நடிகர் கஞ்சா கருப்பு. தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழை...
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை திறனால் முன்னேறி வந்து கொண்டிருப்பவர் நடிகர் கஞ்சா கருப்பு. தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை ஏழை குழந்தைகளின் கல்விக்கு கொடுத்து உதவி வரும் கஞ்சா கருப்பு, "மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கமா ஒதுங்குனதில்லண்ணே. எப்படியாச்சும் ஏழை பிள்ளைக படிக்குறதுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டி இலவசமா பாடம் சொல்லிக் கொடுக்கணும்ணே" என்று அடிக்கடி சொல்வார். இயக்குநர் பாலாவால் பிதாமகனில் அறிமுகமான கஞ்சா கருப்பு, தொடர்ந்து ராம், சண்டைக்கோழி, பருத்தி வீரன், நாடோடிகள் என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் டைரக்டர் ஹரி அடுத்து இயக்கவிருக்கும் புதிய படமொன்றில் நடிக்க கஞ்சா கருப்பு ஒப்பந்தமாகியிருந்தார். முதலில் சின்ன கலைவாணர் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் ஆபாச காமெடியனைத்தான் படத்தின் காமெடி ட்ராக்கில் நடிக்க வைக்க வேண்டும் என விரும்பிய ஹரி, அதன் பின்னர் அவர் பண்ணும் அலும்பை பார்த்து முடிவை மாற்றிக் கொண்டாராம்.
கஞ்சா கருப்பு ஒப்பந்தமானது பற்றி கேள்விப்பட்ட ஆபாச காமெடியன், ஹரியிடம் போனில் பேசி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, சைலண்டாக ஹரி படத்தில் புக் ஆகி விட்டாராம். முதலில் ஒப்பந்தமான கஞ்சா கருப்பு, ஆபாச காமெடியனின் இந்த ஆட்டத்தால் நெறுங்கிப் போயிருக்கிறார். "படத்துல நடிக்க யாரையாவது பேசி அட்டுவான்சு வாங்குன பொறவு நான் அதுல தலையிட்டு இருக்கேனா? ஆனா இந்தாளு என்னைய கேட்கிறாங்கன்னு தெரிஞ்ச பொறவும் கேம் ஆடுனா அத பத்தி என்னான்னு சொல்றது" என்கிறார் ஆவேசத்துடன். "அரியண்ணேந்தான் இதுக்கு ஒரு முடிவ சொல்லணும்" என்று அவருக்கும் ஒரு போன் போட, "அடுத்த படத்தில நீங்க கட்டாயம் இருக்கிங்க" என்று சமாளித்தாராம் டைரக்டர்.

Comments
Post a Comment