Kollywood Kisu Kisu - கதையில் மாற்றம் நடிகை கால்ஷீட் பிரச்னை!

கோடம்பாக்கம் கோடங்கி

http://cinema.dinakaran.com/cinema/gallery/news-in-cinema-103.jpg

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

அஞ்சாதேன்னு சொன்ன இயக்குனரு ஒரு வழியா புது படத்தை ஆரம்பிச்ச¤ட்டாரு. கதையில நிறைய மாற்றம் பண்ணினாராம்... பண்ணினாராம்... முதல்ல சொன்ன கதைக்கு ஏகப்பட்ட செலவு இருந்துச்சாம்... இருந்துச்சாம்... தயாரிப்பு முடியாதுன்னு சொன்னதால, கதையில மாற்றம் பண்ணினாராம். படத்துக்காக ஆட்டோகிராப் ஹீரோ பல மாசம் மீசை, தலை முடிய வளர்த்தாரு.

புது கதைக்கு அது தேவையில்லன்னு நீக்க சொல்லிட்டாராம்... இயக்குனரு சொல்லிட்டாராம்... கவுதம இயக்குனரு த்ரில் படம் ஒண்ணு இயக்குறாரு. அசல் நாயகியோடு டபு நடிகையும் நடிக்கப்போறாரு. கதை கேட்டு ஓகே சொன்ன டபு நடிகை, கால்ஷீட் தராம இழுத்தடிக்கிறாராம்... இழுத்தடிக்கிறாராம்... நடிகையோட காட்சிகளை மட்டும்தான் படம் பிடிக்கணுமாம். அதுக்காக பட யூனிட் காத்துக்கிடக்குதாம்... காத்துக்கிடக்குதாம்...

முதல் ரெண்டு படங்கள்ல ஹோம்லியா நடிச்சாரு செரிலான நடிகை. டா படத்துல திடீர்னு ஓவர் கவர்ச்சிக்கு மாறிட்டாராம்... மாறிட்டாராம்... 'போட்டி அதிகமாயிடுச்சி. இப்படி நடிச்சாதான் தமிழ்ல வாய்ப்பு கிடைக்கும்'னு இன்ஷியல் நடிகரும் இயக்குனரும் கொடுத்த அட்வைஸ்தான் காரணமாம்... காரணமாம்...

Comments

Most Recent