Kollywood Kisu Kisu - நதி ஏமாற்றம் கல்யாணத்தால் சிக்கல்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyUt5Gx1Zo1-hlnNvw-ZA1dSHnGQu7NxEsSdK0er4kyXC6e224X-kEVV0i_ktiQKxqqMIP3_jTO5jHVZsm0MCKubzKN-8ehca5B_5h094EYjKokyrmlxDgtzQ6L4bvAW5QO-BKJZDcAgwB/s320/kissu+kissu.jpgநல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மகாலட்சுமி மகன் படத்துக்கு பிறகு நதி நடிகைக்கு பெருசா எந்த படமும் தேறல... தேறல... பெரிய படம், பெரிய சம்பளத்தோடு வரும்னு காத்திட்டிருந்தவருக்கு கிடைச்சது ஏமாற்றம்தான்... ஏமாற்றம்தான்... அதனால் நதி இப்போ டி.வி. சீரியல் பக்கம் பாயப்போவுதாம்... பாயப்போவுதாம்... இதுக்காக தீவிரமா கதை கேட்கிறாராம். நடிக்கிறதுக்கு வசதியா குழந்தைங்கள சென்னையில படிக்கிறதுக்கும் ஏற்பாடு பண்றாராம்... பண்றாராம்...

தமிழ்லருந்துதான் தெலுங்குக்கு போனாரு சீல நடிகை. ஆனா தமிழ் சினிமா வாய்ப்பு வந்தாலே முகத்தை திருப்பிக்கிறாராம்... திருப்பிக்கிறாராம்... சமீபத்துல காதல் நடிகரோடு ஜோடியா நடிக்க கேட்டாங்களாம். கால்ஷீட் இல்லைன்னு சொல்லி மறுத்துட்டாராம்... நடிகை மறுத்துட்டாராம்...
தெலுங்குல அதிக சம்பளத்தோடு எக்ஸ்ட்ரா கவனிப்புகளும் கிடைக்கிறதால நடிகைக்கு டோலிவுட் பிடிச்சுப்போச்சாம்... பிடிச்சுப்போச்சாம்...

நடிக்குற படத்துக்கு பிரச்னை வரக்கூடாதுன்னுதான் சிந்து நடிகை சீக்ரெட்டா மேரேஜ் பண்ணிக்கிட்டாராம்... பண்ணிக்கிட்டாராம்... இப்போ விஷயம் வெளியில தெரிஞ்சதும் தயாரிப்புங்க நடிகைய லெப்ட், ரைட் வாங்கிட்டாங்களாம். நடிகை அப்செட்ல இருக்கிறாராம்... இருக்கிறாராம்....

Comments

Most Recent