Mamooty Son's debut in Tamil | தமிழில் அறிமுகம் ஆகிறார் மம்மூட்டி மகன்

 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-930.jpg
மம்மூட்டி மகன் துல்கர் சல்மான், தமிழ் படத்தில் அறிமுகம் ஆகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. மகன் துல்கர் சல்மானை ஹீரோவாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார் மம்மூட்டி. மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் மகனை அறிமுகப்படுத்த அவர் விரும்புகிறார். இது தொடர்பாக இயக்குனர் லிங்குசாமியிடம் மம்மூட்டி பேசியுள்ளார்.

இது பற்றி லிங்குசாமி கூறும்போது, ‘‘ஆனந்தம்’ படத்தில் மம்மூட்டியை இயக்கினேன். அது எனது முதல் படம். இப்போது அவரது மகன் அறிமுகமாகும் தமிழ் படத்தை இயக்க வேண்டும் என கேட்டார். சிம்பு நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். இதையடுத்து மம்மூட்டி மகனை இயக்குவேன்’ என்றார்.

Comments

Most Recent