Mysskin's next item girl | மிஷ்கினின் அடுத்த குத்தாட்ட அழகி!

http://ww1.4tamilmedia.com/images/stories/cinema/neetu-chandra.jpg
யாவரும் நலம், அதன்பிறகு தீராதவிளையாட்டு  பிள்ளை என்று கோலிவுட்டில் தனது கவர்ச்சி பயணத்தை ஆரம்பித்தார் பாலிவுட் கவர்ச்சிப் பாவையரில்  ஒருவரான நீத்துசந்திரா. பாலிவுட்டின் ஃபாக்ஸ் ஆபிஸில்  பட்டையைக் கிளப்பிய லெஸ்பியன்  படத்தில் நடித்தவகையில்  இயக்குனர் மிஷ்கினை மிகவும்  கவர்ந்து விட்டாராம் நீத்து. தீராத விளையாட்டு பிள்ளை அறிமுகமான கையோடு நீத்துவை தனது அலுவலகத்துக்கு அழைத்த மிஷ்கின் “ நீத்துவுடன் சேர்ந்து வெளிநாட்டுச் சரக்கை இறக்கிய படியே... “ நீயொரு பின்நவீனத்துவ நடிகை! எனது யுத்தம் செய் படத்தில் நீ ஒரு பாடலுக்கு ஆட வேண்டும்” என்று சொல்ல, ஆன் த ஸ்பாட்டில் அப்ரூவல் கொடுத்திருக்கிறார் நீத்து.

குத்துப்பாடல்களுக்கும், நடணங்களுக்கும் மிஷ்கினின் படங்களில் எப்போதுமே தனி இடமுண்டு. அவரது முதல் படமான சித்திரம் பேசுதடியில் இடம்பெற்ற “ வாழை மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்”,. பிறகு அஞ்சாதேயில் “ கத்தாள கண்ணால குத்தாத “ ஆகிய பாடல்களும் அவற்றில் தங்கள் உடலை வில்லங்க அசைவுகளால் வில்லாக வளைத்த நடிகையரும் தமிழர் மத்தியில் உலகபுகழ் பெற்று விட்டார்கள்.

அதானால்தான் அத்தனை போதையிலும் கேட்டவுடனேயே தலையை ஆட்டி சம்மதித்திருக்கிறார் நீத்து. மேற்கத்திய கண்டெம்ர்ரி நடனத்தை கற்றுள்ள நீத்து முதல்முறையாக குத்தாட்ட்த்தில் தமிழ் ரசிகர்களை கதிகலங்க செய்யப்போகிறார். மே பத்தாம் தேதி நடைபெறும் இந்தப் பாடலின்
படப்பிடிப்பில் பங்கேற்க டான்ஸ் மாஸ்டர் தினேஷுடன் பயிற்சிக்காக முப்பை பறந்திருக்கிறாராம் நீத்து. இந்தப்பாடலின் இடையில் துப்பாக்கியை பிடித்தபடி சேரன் வந்துபோவாரா...இல்லை வேடிக்கை பார்ப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்!

Comments

Most Recent