Entertainment
›
Cine News
›
Police lathi charge Vijay fans in Trichy | தியேட்டரில் விஜய் ரசிகர்கள் ரகளை- தடியடி
திருச்சி: விஜய் நடித்த சுறா படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டரில் பாலாபிஷேகம் செய்தது தொடர்பாக ரகளை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் வரவ...
திருச்சி: விஜய் நடித்த சுறா படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டரில் பாலாபிஷேகம் செய்தது தொடர்பாக ரகளை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்து விரட்டினர்.
விஜய் நடித்துள்ள சுறா இன்று ரிலீஸானது. இதையொட்டி திருச்சியில் ஒரு தியேட்டர் முன்பு கூடிய ரசிகர்கள், நடிகர் விஜய் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இந்நேரத்தில் போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.
பிரச்னை முற்றவே போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டினர். இது போல திண்டுக்கல்லில் ஒரு தியேட்டரில் சவுண்ட் சரியில்லை என ரசிகர்கள் திரையை கிழித்தனர். சேர்கள் மற்றும் லைட்டுகளை நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment