தெலுங்கில் சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா நடிக்கும் புதிய படத்தில் அப்பா கேரக்டரில் நடிக்கிறார் பிரபு. ஒரு காலத்தில் பிசியான ஹீரோவாக இர...
தெலுங்கில் சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா நடிக்கும் புதிய படத்தில் அப்பா கேரக்டரில் நடிக்கிறார் பிரபு.
ஒரு காலத்தில் பிசியான ஹீரோவாக இருந்தவர் பிரபு. பின்னர் குணச்சித்திர கேரக்டர்களுக்கு மாறினார். தற்போது பிசியான குணச்சித்திர நடிகராக விளங்கி வருகிறார்.
தமிழ் முன்னணி இளம் நாயகர்களின் படங்களில் அண்ணன் கேரக்டர்களில் பிசியாக நடித்து வரும் பிரபு அப்பா வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தமிழைத் தாண்டி பிற மொழிப் படங்களுக்கும் தனது குணச்சித்திர சேவையை விரிவுபடுத்துகிறார் பிரபு. தெலுங்கில் சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்து வருகிறாராம் பிரபு.
இதுதவிர கன்னடப் படம் ஒன்றிலும் குணச்சித்திர வேடத்தில் நடிக்கப் போகிறாராம் பிரபு. மேலும் மலையாளப் படத்திலும் அவரைத் தேடி ஒரு வாய்ப்பு வந்துள்ளதாம்.
Comments
Post a Comment