Preference to Tamil - Ajmal | தமிழுக்கே முக்கியத்துவம் : அஜ்மல்!

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-931.jpg
‘கோ’ படத்தில் நடித்து வரும் அஜ்மல் கூறியதாவது: எனது சினிமா கேரியரில் இப்போது முக்கியமான கட்டத்தில் இருக்கிறேன். ‘கதிர்வேல்’ ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகப்படுத்தும் படம். அடுத்து ‘கருப்பம்பட்டி’. முதன் முதலாக அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இதுவும் எனக்கு புதிது. ‘கோ’ பட வாய்ப்பு கிடைத்தது, என் வாழ்க்கையில் திடீர் திருப்பம் என்பேன். அதில் நடிக்கும் கேரக்டர் பற்றி இப்போது விரிவாக சொல்ல முடியாது.

ஆனால் நான் நடிகனாக வருவதற்கு முன்பே, இப்படியொரு கேரக்டரில் நடிக்க கனவு கண்டேன். ‘கோ’ என்னை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும். நிறைய மலையாள பட வாய்ப்புகள் வந்தபோதும் ஒப்புக் கொள்ளவில்லை. எனக்கு பிரேக் தந்த தமிழ் சினிமாவில் சாதிக்க விரும்புகிறேன்.

Comments

Most Recent