Rettaisuzhi | ரெட்டச்சுழி குழந்தைகள் படமா? : தாமிரா விளக்கம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-FHl897XmvFIja7QbjCDDj6TsNtvq7KB8hA_4QioyLNhzI6p_IYIbN2CFDog9XKXLxcApfecDMJQYHJqwWY7zgOysGe6AjkEZG3NAMHu9kPyCMH_ul0D5erWbL2doj008wokTtXGlTiY/s400/Rettaisuzhi-Stills-01.jpg
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘ரெட்டச்சுழி’. தாமிரா இயக்கியுள்ளார். பாரதிராஜா, பாலசந்தர், ஆரி, அஞ்சலி நடித்துள்ளனர். வரும் 23 ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படம் பற்றி தாமிரா கூறியதாவது: இது குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல. குழந்தைகளை மையப்படுத்திய படம். இதுவரை தமிழ் சினிமா பழக்கப்படுத்திய கேரக்டர்களுக்கும், கதைக்கும் இடையே இந்தப் படம் புதிய அனுபவமாக இருக்கும். இரண்டு நண்பர்களுக்குள் நடக்கும் செல்ல சண்டைகளும் ஈகோவும்தான் திரைக்கதை. இதில், பாரதி ராஜாவுக்கு நிறைவேறாத காதல் ஒன்று இருக்கிறது. அந்த காதல்தான், படத்தின் மைய இழை. அஞ்சலி, ஆரி காதலர்களாக நடித்துள்ளனர். படம் ஏன் லேட் என்று கேட்கிறார்கள். இந்தப் படத்தில் அதிகமாக குழந்தைகள் நடித்துள்ளனர். அவர்களுக்கு தேர்வு காலம் இருந்ததால் கொஞ்சம் தள்ளிப் போனது. அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கான லீவு நாட்களில் மட்டுமே படம் பிடிக்க முடிந்தது. இதுதான் காரணம். இவ்வாறு தாமிரா கூறினார்.

Comments

Most Recent