Simbu to start Poda Podi in May

http://im.sify.com/entertainment/movies/tamil/images/apr2010/simsim150.jpgகிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட படம் போடா போடி. சிம்புவும் சரத்குமார் மகள் வரலட்சுமியும் ஜோடியாக நடிப்பார்கள் என கூறப்பட்டது.

ஆனால் அதற்குப் பிறகு சத்தத்தையே காணோம். வரலட்சுமியும் மாம்மா மியா என்று வெஸ்டர்ன் நாடகம் பக்கம் ஒதுங்கிவிட்டார்.

அந்தப் படத்துக்குப் பிறகு வாலிபன் படம் அறிவித்தார் சிம்பு. அதுவும் துவங்கியபாடில்லை. இடையில் விண்ணைத் தாண்டி வருவாயா படம் மூலம் எல்லோரும் நாடும் ஹீரோவாகிவிட்டார் சிம்பு.

அந்த வேகத்திலேயே லிங்குசாமிக்கு ஒரு படம், வெங்கட் பிரபுவுக்கு ஒரு படம் என சிம்பு படங்கள் குறித்து அறிவிப்பு வந்ததே தவிர, எதுவும் பூஜை கூட போடப்படவில்லை. இடையில் கேவி ஆனந்தின் கோ படத்திலிருந்து விலகினார்.

இந்த நிலையில், மீண்டும் போடா போடி படத்தைத் துவங்க விருப்பம் தெரிவித்துள்ளாராம் சிம்பு. அந்தப் படத்தின் ஸ்கிரிப்டில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்துவிட்டால் போதும்... ஷூட்டிங் போயிடலாம் என சிம்பு சொன்னதும் அடக்கமாட்டாத மகிழ்ச்சியில் குதித்தாராம் புதிய இயக்குநரான விக்னேஷ் சிவா.

இந்தப் படம் முன்பு திட்டமிட்டபடி, மே மாதம் கனடாவில் துவங்கவுள்ளது. ஹீரோயின்...? அதே வரலட்சுமிதான்!

Comments

Most Recent