Sura release postponed in Kerala

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhq3s2nkLuj4a1XB2UKUrDNlU8DILM3q3gSrkdkfYMugC6WtASl42wjcavMCoMnO0dNYghJiICtrUOj7KZ4y-lcReCZfCIRNy_3MxBjWZL3cpm55jcLYLXUBd9QmeKUn2oJXgGlhl6VYso/s1600/download-latest-tamil-vijay-sura-mp3-songs-movie-official-posters-stills-pics-photos-images.jpg
மே 1ஆ‌ம் தேதி விஜய்யின் 50வது படம் சுறவெளியாகிறது. பொதுவாக விஜய் படம் தமிழ்நாட்டில் வெளியாகும் அதே நாள் கேரளாவிலும் வெளியாகும். வசூலிலும் அடி பின்னும்.

ஆனால் சுறகேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மலையாளப் படங்கள் கேரளாவில் ச‌ரியாகப் போகாததால் மலையாளப் படவுலகினர் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். முக்கியமாக தமிழ், இந்தி, ஆங்கிலப் படங்கள் கேரளாவில் வெளியாவதை கட்டுப்படுத்துவது.

சமீபத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா கேரளாவில் சூப்பர் ஹிட். நேரடி மலையாளப் படங்களைவிட இது அதிகம் வசூலித்தது.

இந்நிலையில் மற்ற மொழிப் படங்களை அவை ‌ரிலீஸாகும் அதே நாளில் கேரளாவில் வெளியிட மலையாள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.

இந்த தடை மே 1ஆம் தேதி அதாவது சுறவெளியாகும் அதேநாள் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக சுறகேரளாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் சிக்கல் சுறாவின் ‌ரிலீஸ் தேதியில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் ஆச்ச‌ரியமில்லை.

Comments

Most Recent