Entertainment
›
Cine News
›
Angadi theru vengadesh continue acting | முழுநேர நடிகராகப் போகிறார் அங்காடித்தெரு வெட்கடேஷ்
அங்காடித்தெரு படத்தில் கொடுமைக்கார சூப்பர்வைசராக நடித்த டைரக்டர் வெங்கடேஷை அவ்வளவு எளி...
அங்காடித்தெரு படத்தில் கொடுமைக்கார சூப்பர்வைசராக நடித்த டைரக்டர் வெங்கடேஷை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. நட்புக்காக அந்த படத்தில் நடித்த வெங்கடேஷுக்கு இப்போது நிறை சினிமா வாய்ப்புகள் வருகின்றன. தற்போது வல்லகோட்டை படத்தை இயக்கி வரும் வெங்கடேஷ், அடுத்து ஒரு படத்திலும் டைரக்டராக கமிட் ஆகி விட்டாராம். இந்நிலையில்தான் அங்காடித்தெரு படம் ஓவர் நைட்டில் உயரத்தில் கொண்டு வைத்திருக்கிறது. இதனால் இயக்கமா, நடிப்பா? என்ற கேள்வி மனதுள் எழ... நடிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம். அவரது மனைவி மற்றும் சொந்தங்களும் நடிப்பைத்தான் விரும்புகிறார்களாம். தற்போது கமிட் ஆகியிருக்கும் 2 படங்களை இயக்கி முடித்த பின்னர் நிறைய படங்களில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார் வெங்கடேஷ்.

Comments
Post a Comment