Arya's new Comedy Avatar | ஆர்யாவின் புது காமெடி அவதாரம்!

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-965.jpg
‘சிவா மனசுல சக்தி’ படத்துக்குப் பிறகு ராஜேஷ்.எம் இயக்கும் படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. இந்தப் படத்தை ‘நான் கடவுள்’ படத்தை தயாரித்த வாசன் விஷுவல்ஸ் வென்ச்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் நாயகனாக ஆர்யா நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். “இது ஆர்யாவுக்கு முற்றிலும் புதுமையான படம் என்று சொல்லலாம். சமீபத்தில் வெளியான ‘நான் கடவுள்’ உள்பட எல்லா படங்களிலும் ஆக்ஷன் ஹீரோ, மிரட்டலான அகோரி வேடம்னு நடித்திருக்கிறார். ஆனால், இதில் ஆர்யாவை புதுமையாக காண்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதுவரை ஆர்யா காமெடி ரோலில் நடித்ததில்லை. இந்தப் படத்தில் கதையை ஆர்யாவுடன் இணைத்துப் பார்த்தபோது மிகப்
பொருத்தமாக இருந்தார்.

கதையை கேட்ட பிறகு அதிக ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார் ஆர்யா. படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா அதிகம் பேச மாட்டார். ஆனால் படத்தில் அவருடைய நடிப்பு பேசப்படும். அந்தளவுக்கு கேரக்டருக்கு அழகு சேர்த்திருக்கிறார். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு அதிக பங்கிருக்கிறது. பின்னணி இசையாகட்டும் , பாடல்களாகட்டும் மிரட்டியிருக்கிறார். யுவன் & நா.முத்துக்குமார் கூட்டணியில் எல்லா பாடல்களும் பெரியளவில் வெற்றியடையும். என்னுடைய முந்தைய படம் போல் இந்தப் படமும் ரசிகர்களின் மனதை லேசாக்கி மகிழவைக்கும்” என்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

Comments

Most Recent