இந்தியில் கஜினி, லண்டன் டிரீம்ஸ் படங்க ளுக்கு பிறகு அசினுக்கு வாய்ப்புகள் இல்லை. லண்டன் டிரீம்ஸ் தோற்றதால் அவரை புறக்கணித்தனர். அசின் பற...
இந்தியில் கஜினி, லண்டன் டிரீம்ஸ் படங்க ளுக்கு பிறகு அசினுக்கு வாய்ப்புகள் இல்லை. லண்டன் டிரீம்ஸ் தோற்றதால் அவரை புறக்கணித்தனர்.
அசின் பற்றி கிசுகிசுக்களும் பரவின. கஜினியில் நடித்த போது அமீர்கானுடன் நெருக்கமாய் இருப்பதாக பேசப்பட்டார். லண்டன் டிரீம்ஸ் படப்பிடிப்பில் சல்மான்கானுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அசினுக்கு சல்மான் பங்களா வீடு ஒன்றை காதல் பரிசாக வாங்கி கொடுத்துள்ளதாகவும் பேசினர்.
தற்போது கிரிக்கெட் வீரர் டோனியை காதலிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இருவரும் ரகசியமாக சந்திப்பதாகவும் சமீபத்தில் அசின் வீட்டுக்கு டோனி நேரில் சென்று விருந்து சாப்பிட்டு திரும்பியதாகவும் கூறப்பட்டது.
இதனால் வருத்தத்தில் இருக்கிறார் அசின். காவல்காரன் படம் மூலம் விஜய் ஜோடியாகி மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். படப்பிடிப்பில் அவர் கூறியதாவது:-
இந்திப்பட உலகம் வித்தியாசமானது. யாரையாவது பற்றி கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கும். “கஜினி” ஹிட்டானதும் என்னைப் பற்றி நிறைய செய்திகள் வந்தன. அமீர்கானுடன் இணைத்து பேசினார்கள். பிறகு சல்மான்கானுடன் காதல் என்றனர். இப்போது கிரிக்கெட் வீரர் டோனியை விரும்புவதாக செய்திகள்வந்துள்ளது.
இதில் உண்மையே இல்லை. டோனியுடன் நட்பாகத்தான் பழகுகிறேன். காதல் இல்லை. யார் மீதும் எனக்கு காதல் இல்லை. ஆரம்பத்தில் இது போன்ற கிசுகிசுக்களால் வருத்தமானேன். இப்போது பழகி விட்டது.
இந்திக்கு போனதும் கவர்ச்சிக்கு மாறி விட்டதாக பேசுகிறார்கள். கவர்ச்சியில் ஒரு எல்லையை நிர்ணயித்து இருக்கிறேன். அதை ஒரு போதும் தாண்டமாட்டேன்.
விஜய் ஜோடியாக நடிக்கும் “காவல்காரன்” படத்தின் கதை அற்புதமானது. என் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உள்ளது. எனவே ஒப்புக்கொண்டேன்.
Comments
Post a Comment