நான் இப்போதைக்கு எந்தப் படத்தையும் இயக்குவதாக இல்லை. யாரோ சிலர் தவறான செய்திகளைத் தந்துள்ளனர், என்கிறார் நடிகர் தனுஷ். உத்தமபுத்திரன், ...
நான் இப்போதைக்கு எந்தப் படத்தையும் இயக்குவதாக இல்லை. யாரோ சிலர் தவறான செய்திகளைத் தந்துள்ளனர், என்கிறார் நடிகர் தனுஷ்.
உத்தமபுத்திரன், ஆடுகளம், மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ்.
இதற்கிடையே, ஒரு குறும்படத்தையும், அதனைத் தொடர்ந்து முழு நீள திரைப்படம் ஒன்றையும் தனுஷ் இயக்கப்போவதாக செய்திகள் வந்தன. நடிகை குத்து ரம்யா மற்றும் மனைவி ஐஸ்வர்யாவுடன் இணைந்து இந்தப் படங்களை அவர் இயக்குவார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதுபற்றி தனுஷிடம் விசாரித்தோம்.
அவர் கூறுகையில், "ஜனங்க எப்படித்தான் இந்த மாதிரி கற்பனையா எழுதறாங்களோ தெரியல. நான் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை என்னிடம் சின்ன விளக்கம் கூட கேட்காமல் வெளியிடுவது என்ன நியாயம்?
நான் என் குடும்பத்தோடு இருக்கும்போது சின்ன ஹேண்டிகேம்ல வீடியோ எடுப்பேன். அவ்வளவுதான். மத்தபடி சினிமா டைரக்ட் பண்ற ஐடியாவே இல்லை. அதுவும் யாருடனும் இணைந்து டைரக்ட் பண்ற ஆள் நானில்லை. இப்போது நான் மூன்று படங்களில் நடித்து வருகிறேன். யோசிக்கக் கூட நேரமில்லாத அளவுக்கு பிஸி..." என்றார்.

Comments
Post a Comment