பாலிவுட்டில், பல நட்சத்திரங்களுடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்டவர் தீபிகா படுகோன். கடைசியாக கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித...
பாலிவுட்டில், பல நட்சத்திரங்களுடன் இணைத்து கிசு கிசுக்கப்பட்டவர் தீபிகா படுகோன். கடைசியாக கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துடன் சேர்த்து தீபிகா பேசப்பட்டார். அண்மையில் நடந்து முடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது பெங்களூர் அணி விளையாடிய போதெல்லாம் சித்தார்த்தும் தீபிகாவும் ஸ்டேடியத்தில் ஒன்றாக அமர்ந்து அணி வீரர்களை உற்சாகப்படுத்தியதை பார்க்க முடிந்தது. இதனால் சித்தார்த்தும் தீபிகாவும் நெருங்கி பழகுவதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், சித்தார்த்துடனான தனது உறவு குறித்து தீபிகா கூறிய தாவது; சித்தார்த் எனது குடும்ப நண்பர். எங்கள் இருவருக்கும் சிறு வயது முதலே அறிமுகம் உண்டு. எல்லாரையும் போல சித்தார்த்தும் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான். நானும் சாதாரண பெண்தான். எல்லா பெண்களையும் போல நானும் எனது நண்பர்களுடன் ஜாலியாக இருக்க விரும்புகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது. எனது திரையுல வாழ்க்கை திருப்தி அளிப்பதாக உள்ளது. நான் நடித்த படங்கள் வெற்றி பெறுவதும் அடுத்தடுத்து எனக்கு நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment