Ganesh and Aarthi in Kalaiger TV's new programme

Ganesh and arthi in Kalaiger tv`s new programme
கலைஞர் டி.வி.,யில் ஒளிபரப்பாகும் மற்றொரு நிகழ்ச்சியை கணேஷ் - ஆர்த்தி ஜோடி தொகுத்து வழங்கப் போகிறது. சின்னத்திரையில் ஒன்றாக நடித்து நட்பை வளர்த்துக் கொண்ட கணேஷூம், ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திரையில் ரசிகர்களை கலகலப்பூட்டும் இவர்களது வாழ்க்கையும் கலகலப்பாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நட்சத்திர தம்பதியர் இணைந்து நடத்தும் நிகழ்ச்சியியிலும் கலகலப்புக்கு பஞ்சமில்லை என்பதால் கலைஞர் டி.வி., தனது புதிய நிகழ்ச்சிக்கு இவர்களையே தொகுப்பாளர்களாக ஆக்கியிருக்கிறது. முழுக்க முழுக்க முதி​ய​வர்​களை சந்​தோ​ஷப்​ப​டுத்​தும் நோக்​கில் இந்த நிகழ்ச்​சியை களம் இறக்​கு​கி​றது கலை​ஞர்​டிவி குழுமம்.​ 50 வய​துக்கு மேற்​பட்​ட​வர்​கள் கலந்து கொள்​ளும் இந்த நிகழ்ச்​சி​யில் டான்ஸ்,​​ காமெடி உள்​ளிட்ட அனைத்து அம்​சங்​க​ளும் இருக்​கு​மாம்.​ வாரம் ஒரு சிறப்பு விருந்​தி​ன​ரும் உண்​டு என்கிறது கலைஞர் டி.வி.!

Comments

Most Recent