Kalavani songs for 1 minute | களவாணியில் 1 நிமிட பாடல்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjy7ZhavpKlg423De7LCD_yI_AGVZFd3hRs0ZKQB-LLGeAS9VNgX3Nl9UYcQHhM90D0c7cG_ffhI8zWa1EdgxS5y3_T82-PC5goxaymPcEEr-Lx2IFUvzrWdnh0Sg-XJU2Oc36oV_OloVyA/s400/kalavani-movie-official-posters-wallpapers-01.jpg
‘களவாணி’யில் ஒரு நிமிடம் மட்டுமே வருவது போல, 5 பாடல்கள் இடம்பெறுகின்றன என்றார் இயக்குனர் சற்குணம். நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தஞ்சாவூர் வட்டார வழக்கின் பின்னணியில் உருவாகியுள்ள படமிது. ஊரில் களவாணித்தனம் செய்து திரியும் இளைஞனுக்குள் காதல் வருகிறது. காதலும் களவாணித்தனமும் கலந்த யதார்த்தமான படமாக இது இருக்கும். படத்தில் ஏழு பாடல்கள். இதில் ஒரு நிமிடம் மட்டும் வருவது போல 5 பாடல்கள் வருகிறது. இதற்கு காரணம், இப்போதெல்லாம் பாடல்கள் வந்தாலே தியேட்டரில் ரசிகர்கள் வெளியே போய்விடுகிறார்கள். அதை கவனத்தில் கொண்டு, படத்தில் வசனமாக இடம்பெற வேண்டிய சூழலை பாடலாக்கி உள்ளோம். இது புதுமையாக இருக்கும். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை ஏழு நாள் நிஜ மழையில் படமாக்கினோம். அக்காட்சி பேசப்படும். ‘பசங்க’ விமல், புதுமுகம் ஓவியா நடித்துள்ளனர். இவர்களுடன் சரண்யா, பொன்வண்ணன், கஞ¢சா கருப்பு, ‘வெண்ணிலா கபடி குழு’ சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எஸ்.எஸ். குமரன் இசையமைத்துள்ளார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Comments

Most Recent