Kollywood Kisu Kisu - தாய்க்குலத்தின் புலம்பலும் சான்ஸ் வேட்டையும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyUt5Gx1Zo1-hlnNvw-ZA1dSHnGQu7NxEsSdK0er4kyXC6e224X-kEVV0i_ktiQKxqqMIP3_jTO5jHVZsm0MCKubzKN-8ehca5B_5h094EYjKokyrmlxDgtzQ6L4bvAW5QO-BKJZDcAgwB/s320/kissu+kissu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

சிலிம்ரன் நடிகை ஈசிஆர் ரோட்டுல பிரமாண்ட பங்களா கட்டுறாரு... இங்கேயே நிரந்தரமா செட்டிலாகி சினிமா தயாரிப்பு, டி.வி புரோக்ராமுன்னு நிறைய ஐடியா வச்சிருக்காராம்... வச்சிருக்காராம்... அதோடு கணவரை ஹீரோவாக்கவும் முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்...

ஐந்து லி நடிகை சினிமா விழாக்கள்ல நிறைய கலந்துக்குறாராம்... கலந்துக்குறாராம்... கடைத்தெரு படத்துக்கு பிறகு நிறைய பேர் விழாவுக்கு கூப்பிடுறாங்கன்னு அவர் காரணம் சொல்றாரு. அதே நேரம், நாலு பேரு பழக்க வழக்கம் வேணும்னு சொல்லி தாய்க்குலம்தான் மகளை வற்புறுத்தி பங்ஷனுக்கு அழைச்சிட்டு வர்றாராம்... வர்றாராம்... இயக்குனர்கள்கிட்ட மகளை அறிமுகப்படுத்தி, சான்ஸ் வேட்டையும் நடத்துறாராம்... நடத்துறாராம்..

கவர்ச்சி குத்தாட்ட கான் நடிகைக்கும்
அவரோட அம்மாவுக்கும் முட்டிக்கிச்சாம்... முட்டிக்கிச்சாம்... பாய் பிரண்ட்ஸோடு சுதந்திரமா இருக்கிறதை அம்மா கண்டிக்கிறாராம். அதனால எங்கே போனாலும் தாய்க்குலத்தை கழற்றி விடுறாராம்... கழற்றி விடுறாராம்... நெருக்கமானவங்ககிட்ட தாய்க்குலம் சொல்லி சொல்லி புலம்புதாம்... புலம்புதாம்...

Comments

Most Recent