Kollywood Kisu Kisu - பந்தா ஹீரோ நடிகை சிகிச்சை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyUt5Gx1Zo1-hlnNvw-ZA1dSHnGQu7NxEsSdK0er4kyXC6e224X-kEVV0i_ktiQKxqqMIP3_jTO5jHVZsm0MCKubzKN-8ehca5B_5h094EYjKokyrmlxDgtzQ6L4bvAW5QO-BKJZDcAgwB/s320/kissu+kissu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

முதல்முறையா மலையாளத்துல நடிச்சாரு மழை நடிகை. ஷூட்டிங்கில் நடிகைக்கும் பிருத்வியான ஹீரோவுக்கும் ஆரம்பிச்ச நட்பு, ஷூட்டிங் முடிஞ்சு, இப்போ படம் ரிலீசாகியும் தொடருதாம்... தொடருதாம்... அடிக்கடி நடிகையோடு போன்ல பேசலன்னா ஹீரோவுக்கு வேலையே ஓடாதாம்... ஓடாதாம்...

காலேஜ் ஸ்டூடன்டுன்னு பெயர் எடுத்த ஹீரோவுடைய மகன் நடிக்க வந்திருக்காரு. முதல் படமே இன்னும் ரிலீசாகல. ஆனா மகன் நடிகரோட பந்தாவுக்கு அளவில்லையாம்... அளவில்லையாம்... கோடம்பாக்க ஆட்கள் போன் நம்பரை கேட்டா கூட, Ôமேனேஜர்கிட்ட பேசுங்கÕனு சொல்றாராம்... சொல்றாராம்... அவரை வச்சு படம் தயாரிக்க விரும்பிய புரொடியூசருக்கும் இதே ட்ரீட்மென்ட்டாம். அப்பாவுக்கு தப்பாத பிள்ளைனு கோடம்பாக்கம் கமென்ட் அடிக்குதாம்... அடிக்குதாம்...

முமைத்தான கவர்ச்சிக்கு தெலுங்குலேயும் ஹீரோயின் வாய்ப்பு இல்ல. பல முயற்சி பண்ணியும் எதுவும் நடக்கல. உடம்பை கொஞ்சம் குறைச்சி பாருனு நட்பு வட்டாரம் அட்வைஸ் பண்ணினாங்களாம்... பண்ணினாங்களாம்... அதனால கொழுப்பை குறைக்கிற சிகிச்சையை நடிகை பண்ணப்போறாராம்... போறாராம்...

Comments

Most Recent