நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... மேக்னட் கவர்ச்சி நடிகை சமீபத்துல ரகசிய ட்ரீட்மென்ட் எடுத்தாராம்... எடுத்தாராம்... நார...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
மேக்னட் கவர்ச்சி நடிகை சமீபத்துல ரகசிய ட்ரீட்மென்ட் எடுத்தாராம்... எடுத்தாராம்... நார்த¢ சினிமா பக்கம் இதுதான் ஹாட் டாபிக்காம்... டாபிக்காம்... கங்காரு தேசத்து கிரிக்கெட் வீரரோடு நெருக்கமா இருந்தது பத்தியும் பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...
உடம்பை குறைச்சாத்தான் இனி சினிமால உருப்பட முடியும்னு நமீ நடிகைக்கு நெருங்கியவங்க அட்வைஸ் பண்ணினாங்களாம். அதனால வெயிட்டை கணிசமா குறைச்சிட்டாராம்... குறைச்சிட்டாராம்... சமீபத்துல சொந்த தேசத்துக்கு போனவரு அங்கிருக்கும் குடும்ப சாமியாரை சந்திச்சாராம். அவர் சொல்லிக் கொடுத்தபடி யோகா செஞ்சு உடம்பை குறைச்சாராம்... குறைச்சாராம்...
தமிழ்ல படம் எதுவுமில்லாம இருக்கிறாரு ஜெயம் கொண்ட விநயமான நடிகர். இப்போ பாலிவுட்ல சான்ஸ் தேடுறாராம்... தேடுறாராம்... தயாரிப்புங்க, இயக்குனருங்களை சந்திச்சு, 'நான் மாஜி உலக அழகி ஐசோட உறவு'ன்னு சொல்லித்தான் சான்ஸ் தேடுறாராம்... தேடுறாராம்...
Comments
Post a Comment