My caste is Indian- Amitabh | என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்'

While the debate over caste based census intensifies with most political parties favouring it Amitabh Bachchan has clearly said that if ever asked to mention his caste he would categorically say his caste is Indian irrespective of what the system decides.
Big B has said in his blog that his father, Harivansh Rai Bachchan, a noted Hindi poet and litterateur, never believed in caste system.
"My Father never believed in caste and neither do any of us. He married a Sikh (Teji Bachchan), I married a Bengali (Jaya Bhaduri), my brother a Sindhi (Ramola), my daughter (Shweta) a Punjabi (Nikhil Nanda), my son (Abhishek) a Mangalorean (Aishwarya Rai)... in his autobiography he (Harivansh Rai) had expressed that future generations of his family should marry into different parts of the country. So far that tradition has been kept alive!!"


மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என் சாதி என்னவென்று கேட்டால் இந்தியன் என்றுதான் சொல்வேன் என்று கூறியுள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்.

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரி வருகின்றன. அரசும் இதற்கு ஒப்புக் கொள்ளும் நிலை உள்ளது.

ஒருவேளை அப்படி சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, தனது சாதி என்ன என்று கேட்டால், இந்தியன் என்றுதான் சொல்வேன், என்று அமிதாப் பச்சன் தனது ப்ளாக்கில் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் எழுதியுள்ளதாவது:

எனது தந்தை கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சன், சாதி அமைப்புகள் மீது ஒருபோதும் நம்பிக்கை கொண்டதில்லை.

அதனால்தான் எனது தந்தை ஒரு சீக்கிய பெண்ணை (தேஜி பச்சன்) திருமணம் செய்து கொண்டார்.

நான் ஒரு பெங்காலி பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்( ஜெய பாதுரி).எனது சகோதரர் சிந்து பெண்ணையும், எனது மகள் பஞ்சாபியையும், எனது மகன்( அபிஷேக் பச்சன்) மங்களூர் பெண்ணையும் ( ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொண்டார்கள்..." என்று கூறியுள்ளார்.

Comments

Most Recent