Naartha Malai Muthu Mariamman temple festival is a famous one in Tamil Nadu. The temple is situated in Pudukkottai District. Every year mo...
This festival features in the film Thambikkottai. R Ammu Ramesh is directing this film. As per the sequence, hero Narain is in search of his lover Poonam Bajwa. Poonam Bajwa was stuck up in the crowds who had come to witness the shooting. She got suffocated because of the stampede and swooned down.
The crew immediately formed a security ring and saved her. The doctor was brought to the shooting spot. She was given treatment. The shooting got delayed because of this. The shooting commenced after clearing the crowd.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் திருவிழா மிகவும் பிரசித்தம். ஆண்டுதோறும் இங்கு ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். இத்திருவிழா காட்சி, ‘தம்பிக்கோட்டை’ படத்தில் இடம்பெறுகிறது. ஆர்.அம்மு ரமேஷ் இயக்குகிறார்.
கதைப்படி, ஹீரோ நரேன், காதலி பூனம் பஜ்வாவை தேடுவது போன்ற காட்சியை, 5 கேமராக்கள் மூலம் கண்ணன் படமாக்கினார். அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் கூட்டத்தில் சிக்கிய பூனம் பஜ்வா, திடீரென்று மூச்சு திணறி மயங்கி விழுந்தாராம். உடனே படப்பிடிப்புக் குழுவினர், பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி, அவரை காப்பாற்றினர். உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு டாக்டர் வரவழைக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், சில மணி நேரம் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. கூட்டத்தினரை போலீஸ் கட்டுப்படுத்திய பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.

Comments
Post a Comment