மின்சார பற்றாக்குறை காரணமாக தியேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இ...
மின்சார பற்றாக்குறை காரணமாக தியேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இது இங்கல்ல... பாகிஸ்தானில். தமிழகத்தில் மின் பற்றாக்குறை எனக்கூறி தினமும் மூன்று மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின் தடை அமலில் இருக்கிறது. இதுதவிர பராமரிப்பு பணிகள் என்று கூறி அவ்வப்போது நாள் முழுவதும் மின் சப்ளை நிறுத்தப்பட்டு வருகிறது. அரசின் மின்தடை பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமான அம்சமான தியேட்டர் தொழிலை பாதித்தாலும், ரசிகர்களின் வசதிக்காக தியேட்டர்களில் ஜெனரேட்டர் மூலம் சினிமா காட்டப்பட்டு வருகிறது.
ஆனால் பாகிஸ்தானில் நிலைமையை வேறு. அங்கும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் இரவு 8 மணிக்கு மேல் திரையரங்குகள் இயங்கக்கூடாது என்று அந்நாட்டு அரசு தடை போட்டிருக்கிறது. அங்கு மொத்தம் 1,300 தியேட்டர்கள் இருந்தன. தற்போது, 200 தியேட்டர்கள்தான் உள்ளன. இந்த தியேட்டர்களில் சமீபத்தில்தான் இந்திய திரைப்படங்களை வினியோகிக்க உரிமை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்நாட்டில் கடும் மின்சார பற்றாக்குறை நிலவுவதையொட்டி இரவு 8 மணிக்கு மேல் திரையரங்கம் இயங்கக் கூடாது, ஜெனரேட்டரை இயக்கியும் திரைப்படங்களை காட்டக்கூடாது என, அரசு தடை விதித்துள்ளது. இதனால், திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசின் இந்த உத்தரவு சினிமா உலகத்துக்கு சாவு மணி அடிப்பதாக உள்ளது என, திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment