Entertainment
›
Cine News
›
Sasikumar to introduce Sridevi's daughter Janavi in Tamil | மகளுக்காக சசிகுமாருக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய ஸ்ரீதேவி
Sasikumar to introduce Sridevi's daughter Janavi in Tamil | மகளுக்காக சசிகுமாருக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய ஸ்ரீதேவி
தமிழ் திரையுலகில் பேரழகி, அழகு தேவதை என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்ரீதேவி தன் மகள் ஜான்வியை நடிப்புலகிற்கு அறிமுகம் செய்யும் முயற்சிகளில் இற...
தமிழ் திரையுலகில் பேரழகி, அழகு தேவதை என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்ரீதேவி தன் மகள் ஜான்வியை நடிப்புலகிற்கு அறிமுகம் செய்யும் முயற்சிகளில் இறங்கி உள்ளார். இதன் முதன் முயற்சியாக டைரக்டர் சசிகுமாருக்கு ஸ்ரீதேவி எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த எஸ்எம்எஸ்சில், உங்க படங்கள்னா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். உங்களை சந்திக்க விரும்புறோம். வர முடியுமா? என்று அனுப்பி உள்ளார். இதை கண்ட சசிகுமார் கோடை வெயிலிலும் காஷ்மீரில் இருப்பது போன்று குளுகுளுவென்று ஆகி விட்டார்.உடனே படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு மும்பைக்கு பறந்து விட்டார், சசிகுமார். அங்கு குடும்பதோடு விருந்து, அன்பான உபசரிப்பு என்று மனசை மலர வைத்த ஸ்ரீதேவி, சசிகுமார் கிளம்பும்போது தனது மகளின் போட்டோவையும் கொடுத்துள்ளார். மேலும் என் மகளை தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்தணும்னுதான் நான் ஆசைபடுறேன். அதுவும் உங்க படத்தில் அறிமுகம் ஆனா ரொம்ப சந்தோஷப்படுவேன் என்றுள்ளார். அதற்கு சசிகுமாரும் ஓகே சொல்லி உள்ளார். வெகு விரைவில் தமிழ்த் திரையுலகில் ஜூனியர் ஸ்ரீதேவி அறிமுகமாகும் படத்தின் துவங்க உள்ளதாக ஸ்ரீதேவியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீதேவியின் மகளை தமிழில் நாயகியாக அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் சசிகுமார்.
சுப்ரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் ஆகிய மூன்று படங்களில் இயக்குநராக, தயாரிப்பாளராக மற்றும் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டியவர் சசிகுமார்.
இப்போது நகரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் தயாரிப்பாளர் நடிகர் விக்ரம்.
இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த சசிகுமாருக்கு நடிகை ஸ்ரீதேவியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
உடனே மும்பைக்கு விமானத்தில் பறந்த சசிகுமார், ஸ்ரீதேவியைச் சந்தித்துள்ளார். அவருக்கு தனது வீட்டில் விருந்தளித்த ஸ்ரீதேவி, தன் மகள் ஜானவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த வேண்டும் என சசிகுமாரைக் கேட்டுக் கொண்டாராம். கூடவே, "உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. உங்களுடன் ஜோடியாக என் மகளை அறிமுகப்படுத்தினால் இன்னும் சந்தோஷம்" என்று கூற, மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக ஒப்புக் கொண்டாராம் சசிகுமார்.
ஏற்கனவே தெலுங்கு படத்தில் ஜானவியை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வந்தன. நாகார்ஜுனா-அமலா தம்பதியின் மகனான அகிலுக்கு ஜோடியாக நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு தமிழ் படத்தில் அறிமுகப்படுத்துகிறார்.
ஜானவிக்கு 14 வயதுதான் ஆகிறது. இப்போதே முயற்சித்தால்தான், நல்ல கதை, கதாபாத்திரங்கள் தேர்வு என ஒரு வருடம் கழிந்து விடும். அதற்குள் ஜானவி கதாநாயகி தகுதியை அடைந்து விடுவார் என்று கருதுகிறார்.
ஸ்ரீதேவி 16 வயதில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். மகளையும் அதே பதினாறு வயதில் அறிமுகப்படுத்த இப்போதே வலுவாக அடித்தளம் போடுகிறார் ஸ்ரீதேவி.
Comments
Post a Comment