Vikram's offer to Sasikumar | 'நீ பெரிய டைரக்டர் எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடு' - விக்ரம்

"சுப்பிரமணியபுரம்' படத்தில் வரும் ""கண்கள் இரண்டால்'' பாடலை பார்த்து விட்டு ""நீ பெரிய டைரக்டர் ஆகிட்ட, அடுத்து எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடு'' என பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார் விக்ரம். அடுத்த நிமிடமே விக்ரம் கையெழுத்திட்ட, தொகை நிரப்பப்படாத செக் இயக்குநர் சசிகுமாரை (படம்) வந்தடைந்திருக்கிறது.

கொடைக்கானல் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது "" நீ என்னவாக போகிறாய்''என டீச்சர் கேட்க, ""டைரக்டராகனும்னு சொல்லியிருக்கிறார்''. இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் ""கீழ்ப்படிய கற்றுக் கொள். கட்டளையிடும் பணி தானாக வரும்'' என்ற பொன்மொழியை தன் வாழ்க்கையின் தாரக மந்திரம் என தன் உதவியாளர்களிடமும் சொல்லுவார்.

""தமிழ் சினிமாவை இன்று கலக்கி கொண்டிருக்கும் சசிகுமார் அவர்களே'' என ரஜினி சொல்லி ஒரு மேடையில் சசிகுமாரை நெகிழ வைத்திருக்கிறார். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என அனைத்திலும் உச்சம் தொட்ட சசிகுமாரின் அடுத்த படைப்பும் 54 வயது உடைய ஹீரோ, சென்னை வாழ்க்கை முழு பிரதிபலிப்பு என சஸ்பென்ஸ் எகிறி நிற்கிறது.

Comments

Most Recent