Actress Sangavi to get married soon | திருமணத்துக்காக கோயில் கோயிலாக சுற்றும் சங்கவி!

http://www.indianmasala.com/wet/sangavi2.jpg

நடிகை சங்கவி திருமண வரம் வேண்டி கோயில்கோயிலாக சுற்றி வருகிறார். இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகி விட்டன. சங்கவியுடன் பீல்டுக்குள் நுழைந்த மீனா, ரம்பா உள்ளிட்டவர்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், இவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதற்காக மாப்பிள்ளை வேட்டையில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.
இதற்கிடையில் தனக்கு பொருத்தமானவராக, தன்னை புரிந்து கொள்பவராக மாப்பிள்ளை இருக்க வேண்டும் என விரும்பும் சங்கவி, இதற்காக கோயில் கோயிலாக சுற்றி வருகிறாராம். சமீபத்தில் மாமல்லபுரம் திருவிட‌ந்தை கல்யாண பெருமாள் கோயிலுக்கு சென்ற சங்கவி, நல்ல மாப்பிள்ளைக்காகத்தான் இவ்வளவு நாள் வெயிட்டிங். என்னோட நடிக்க வந்த எல்லா ஹீரோயின்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி. பொருத்தமானவர் கிடைத்தால் உடனே பங்ஷன்தான், என்றார். திருவிடந்தை கல்யாணபெருமாளை தரிசித்ததன் பலனாகத்தான் மீனா, ரம்பா, வையாபுரி உள்ளிட்ட சில சினிமா பிரபலங்களுக்கு திருமணம் நடந்ததாம். அதையும் அம்மணியே சொல்கிறார்.

Comments

Most Recent