Ajith's 50th and 51st film

http://worldinspiration.files.wordpress.com/2008/12/ajith-miracle.jpg
"விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துக்குப் பின் அஜித்தின் 50-வது படத்தை இயக்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். திரைக்கதை உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், அஜித்தின் வருகைக்காக காத்திருக்கிறார் கௌதம் மேனன். "காக்கி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் கௌதம் மேனனின் 10-வது படமாக இது உருவாகிறது. சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் அஜித் பங்கேற்று வருவதால்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அஜித், கௌதம்மேனன் இணையும் இந்தப் படத்துக்கு "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் பணிபுரிந்த மனோஜ் பரமஹம்ஸô ஒளிப்பதிவு செய்கிறார். தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது. அதற்குள் ஹிந்தி "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தை முடிக்கும் முடிவில் இருக்கிறாராம் கௌதம்மேனன். அஜித்தின் 51-வது படத்தையும் கௌதம் மேனன் இயக்க பேச்சு நடக்கிறது.

Comments

Most Recent