Entertainment
›
Cine News
›
A.R.Rahman, Resul Pookutty to be Oscar Juries | ஆஸ்கர் விருது-நடுவராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு
ஆஸ்கர் விருதுகளைத் தேர்வு செய்யும் கமிட்டியில் நடுவர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
ஆஸ்கர் விருதுகளைத் தேர்வு செய்யும் கமிட்டியில் நடுவர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியர்களுக்குப் பெருமளவில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் கொடுத்த படம் ஸ்லம்டாக் மில்லியனர். இப்படத்துக்காக ரஹ்மான் இரண்டு விருதுகளைப் பெற்றார். ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கு தலா ஒரு விருது கிடைத்தது.
இந்த நிலையில் விருத்துக்கான படங்களைப் பரிசீலிக்கும் ஆஸ்கர் கமிட்டியில் ரஹ்மானும், பூக்குட்டியும் சேர்க்கப்பட்டுள்ளனர். படங்களைப் பார்த்து மதிப்பிட்டு மார்க் கொடுக்கும் பணி இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் போல ஏராளமான பேர் இக்கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், மிகப் பெரிய பணி. இதை எதிர்பார்க்கவில்லை. சிறப்பாக செய்ய வேண்டும் என கருதுகிறேன் என்றார்.
Comments
Post a Comment