Asin cry for refuse of John | ஜான் நோ சொன்னதால் அசின் கண்ணீர்

http://fillum.com/wp-content/uploads/2010/04/john-abraham_asin.jpg
தமிழில் கெளதம் மேனன் இயக்கிய காக்க காக்க படம், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கு புது வாழ்வு கொடுத்தது. தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. ஹீரோவாக ஜான் ஆப்ரகாமையும், ஹீரோயினாக அசினையும் தேர்வு செய்துவைத்திருந்தார், இயக்குனர் விபுல் ஷா. ஆனால் இப்போது அசின் இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். காரணம், ஜான் ஆப்ரகாம்தான் அசின் வேண்டாம் எனக் கூறி விட்டாராம். இதற்கு ஜான் ஆப்ரகாம் சொன்ன காரணம், கஜினி படமும், காக்க காக்க படமும் கிட்டதட்ட ஒரே மாதிரியான கதையமைப்பை கொண்டவை; இரண்டும் வேறு வேறு கதை என்றாலும் கூட கஜினியின் நிழல் காக்க காக்க படத்திலும் உள்ளது; இந்தி கஜினியில் அசின் நடித்துள்ளதால் இப்போது இதிலும் நடித்தால் சரியாக இருக்காது என்று பீல் பண்ணுவதாக விபுலிடம் கூறியுள்ளார். ஆனால் விபுலுக்கோ அசினைத்தான் போட வேண்டும் என ஆசை. ஏற்கனவே அவரது லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் அசின்தான் நாயகியாக நடித்திருந்தார். அந்த அனுபவத்தால் இந்தப் படத்திலும் அசினை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக இருந்தார். ஆனால் ஹீரோவான ஜான் வேறு மாதிரியாக நினைத்ததால் வேறு வழியில்லாமல் அசினிடம் ஸாரி சொல்லி உள்ளார் விபுல். அதைக் கேட்டதும் அசின் கண்­ணீர் விட்டு அழுதுவிட்டார். தன்னை ஜான் நிராகரித்து விட்டாரே, அதுவும் நல்ல நண்பராக இருந்து கொண்டு இப்படிச் சொல்லி விட்டாரே என்று நெருக்கமானவர்களிடம் சொல்லி புலம்பி வருகிறார், அசின்.

Comments

Most Recent