Baby Boy for Jyothika | ஜோதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

Good news for all the fans of Surya as he has become father for the second time.
Jothika gave birth to a healthy baby boy at a private hospital at 4.03am on 7th June. The couple already have a baby girl Diya.
The baby was expected anytime this week. Suriya and Jothika are the most loved couple in Kollywood and after a fairytale romance, tied the knot in 2006. It was one of the famous weddings in Kollywood. In 2007 they couple had their first child Diya.
southdreamz.com wishes the young parents and the new-born all the success in the future.http://i51.photobucket.com/albums/f363/demideity/image004.jpg
நடிகை ஜோதிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. வாலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, முகவரி, வேட்டையாடு விளையாடு, மொழி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கும் ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகி விட்டார். இல்லற வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புவதாக கூறிவிட்டு புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இல்லதரசியாக இருந்து வருகிறார்.

இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு தியா என்று பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் ஜோதிகா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பமாக இருந்த ஜோதிகாவுக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (07-06-10) காலை 4.03 மணிக்கு ஜோதிகாவுக்கு அழகான ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது.

ஏற்கனவே பெண் குழந்தை இருப்பதால், ஜோதிகா மற்றும் குடும்பத்தினர் ஆண் குழந்தை வேண்டும் என விரும்பினர். அவர்களின் விருப்பப்படியே ஆண் குழந்தை பிறந்திருப்பதால் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷம் அடைத்தனர். ஜோதிகாவுக்கு குழந்தை பிறந்ததை அறிந்த திரையுலக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரசவத்துக்கு பின்னர் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

Most Recent