சுறா கருவாடாக தங்களை வாடி வதங்கச் செய்துவிடும் என்று கனவிலும் நினைக்கவில்லை விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும். தென்மாவட்டங்கள...
சுறா கருவாடாக தங்களை வாடி வதங்கச் செய்துவிடும் என்று கனவிலும் நினைக்கவில்லை விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும். தென்மாவட்டங்களில் மட்டும் 160 திரையரங்க உரிமையாளர்களுக்கு டேர்ம்ஸ் முறையில் திரையிட்ட வகையில் ஐந்து முதல் பதிணைந்து லட்சம் வரை இழப்பைச் சந்தித்திருப்பதாக கணக்கு காட்டியிருப்பதாக தகவல் கிடைக்கிறது.
வேட்டைக்காரனில் கூட லாபமில்லாவிட்டாலும் நஷ்டமில்லை என்கிறார்கள். பொதுவாக ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும் விஜயின் படங்களால் இழப்பீட்டை சந்திக்கும் ஒருசில எக்ஸிபிட்டர்கள், விஜயின் தந்தையான எஸ்.ஏ.சியை சந்தித்து கணக்கை நேர்மையாகக் காட்டி இழப்பீட்டை பெற்றுகொள்வது வழக்கமாம்.
விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் கொட்டிக்கொடுத்த கில்லி கூட சில திரையரங்குகளில் சரியாகபோக வில்லை என்று சொல்கிறார்கள் தொழில் கரைகண்ட சில மீடியேட்டர்கள். இந்தமுறை சுறா இவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுத்தற்கு காரணம் விஜய் ரசிகர்களே ஒழுங்காக படம் பார்க்க வில்லை ( மொத்தம் 40 லட்சம் ரசிகர்கள் என்பது மன்ற கணக்கு) என்பதுதான்.
உயிரைக் கொடுக்கிற ரசிகர்களாக இருந்தாலும் கதை பழசாக இருந்தால் அது ரஜினியாக இருந்தாலும் பார்க்க மாட்டார்கள் என்பது சுறா மூலம் உறுதிப்பட்டு விட்ட நிலையில், சிங்கத்தின் அதிரடி வசூல் கண்டு மலைத்துப் போய் நிற்கிறது கோடாம்பாக்கம். நேற்று ஃபாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி ஒரு தியேட்டரில் 300 பேர் படம் பார்த்தாலும் கூட கடந்த பத்து நாட்களில் 30 கோடி வசூலைத் தாண்டி விட்டது என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
இன்னும் முப்பது கோடியாவது சிங்கம் வசூல் செய்யும் பட்சத்தில் விஜயின் 90 கோடி வசூல் சாதனையை முறியடிக்க ரஜினி படத்தால் மட்டுமே முடியும் இன்னும் விஜய் வசூல் சக்கரவர்த்திதான் ஆனால் அவர் எக்ஸ்ட்ரீம் ஹீரோயிஸம் பண்ணாமல் கில்லியைப் போல யதார்த்தமான ஹீரோயிஸம் பண்ண வேண்டும் , அதைச் செய்வதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், படத்தயாரிப்பாள சங்கிலி முருகன் தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகக்குழுவினர், விஜய் இ எஸ்.ஏ.சி உள்ளிட்டோர் கலந்து கொண்ட கட்டப்பஞ்சாயத்தில் ஒரு முடிவு ஏற்பட்டு நிம்மதி பெருமூச்சு விட்டிருகிறார் விஜய். தற்போது நடித்து வரும் காவல்காரன் படத்தை முதல்பிரதி அடிப்படையில் அதன் தயாரிப்பாளரிடமிருந்து வாங்கி அதை நஷ்டப்பட்ட தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருக்கும் நஷ்டத்தை கழித்துக்கொண்டு குறைந்த விலைக்கு கொடுக்க ஒப்புகொண்டிருகிறாராம் விஜய்.
இதற்கான ஒப்பந்ததில் கையேழுத்திட்ட விஜய், இந்தமுறை தானே படத்தை வாஙி விநியோகிக்க இருப்பதால் சன் டிவிக்கு தற்காலிகமாக குட்பை சொல்லியிருகிறார் என்கிறார்கள். ஆனால் சன் டிவியோ எந்த தியேட்டருக்கு எவ்வளவு நஷ்டம் என்று சொல்லுங்கள் நாங்கள் சரி பண்ணுகிறோம், ஆகஸ்டில் எந்திரன் என்று ரஜினி சொன்னாலும் அதை தீபாவளிக்குத்தான் தாயாராகு. எனவே எங்களுக்கு ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய படம் வேண்டும் என்று கேட்கிறார்களாம்.
ஆனால் விஜய் கராராக மறுத்து விட்டது மட்டுமல்ல, அதிகப்படியான ஹைப்பும் எனது படங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். சித்திக் கையில் சிக்கிய நேரம் விஜய் பழையபடி வசூல் சக்கரவர்த்தியாக தனது இடத்தை தக்க வைப்பார் என்கிறார்கள் அவரது அபிமானிகள். பார்க்கலாம் !
Comments
Post a Comment