‘பி’ பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் படம் ‘துரோகம் நடந்தது என்ன?’. இதில் புதுமுகங்கள் கிஷோர், ஸ்வாதி, சசிகுமார், லீனாவுடன், அம்பி...
‘பி’ பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் படம் ‘துரோகம் நடந்தது என்ன?’. இதில் புதுமுகங்கள் கிஷோர், ஸ்வாதி, சசிகுமார், லீனாவுடன், அம்பிகா, டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். ராம்கோபால் வர்மாவின் உதவியாளர் சமீர் இயக்கி உள்ளார். இந்த படம் தணிக்கைக்கு சென்றபோது அதில் உள்ள படுக்கையறை காட்சிகளையும் முத்தக் காட்சிகளையும் நீக்கி ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் லண்டன் ராஜா கூறும்போது, “இன்றைக்கு செல்போன்கள் பெரிய கலாசார சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தங்களின் தனிமையை விளையாட்டாக, செல்போனில் படம் பிடிக்கிறார்கள். அது இன்னொருவன் கையில் கிடைத்து அவர்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பது கதை. கதையின் தேவை கருதி படுக்கையறை காட்சிகளும் முத்தக் காட்சிகளும் இடம்பெற்றது. இது நம் கலாசாரத்தை பாதிக்கும் என்று சொல்லி அந்த காட்சிகளை நீக்க சொன்னார்கள். நீக்கி விட்டோம். வரும் 11&ம் தேதி படம் வெளிவருகிறது” என்றார்.

Comments
Post a Comment