பொன்னர் சங்கரில் சினேகா


>"விடியல்', "பவானி ஐ.பி.எஸ்', "முரட்டுக் காளை', "அறுவடை', "நூற்றுக்கு நூறு', மலையாளத்தில் "ஷிகார்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சினேகா. மலையாளத்தில் மம்முட்டியுடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்து விட்ட நிலையில்,  இப்போதுதான் மோகன்லால் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில் வரும் அனன்யாவுக்கு சினேகா அம்மாவாக நடிக்கிறார் என்ற செய்தியை மறுத்து,"""அனன்யாவுக்கு அம்மாவாக நடிக்கிறேன் என்பதில் உண்மையில்லை. ஆனால் அனன்யாவும் இருக்கிறார். நானும் அனன்யாவும் அம்மா - மகளாக வரும் காட்சிகள் ஒன்று கூட இல்லை. அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை'' என்று சமீபத்தில் விளக்கம் அளித்த சினேகா, சத்தமில்லாமல் முதல்வர் கருணாநிதி கதை, வசனத்தில் உருவாகி வரும் பொன்னர் சங்கரில் பிரசாந்தின் தங்கையாக நடிக்கிறாராம்.

Comments

Most Recent