'பட வாய்ப்புக்காக அழுபவள் அல்ல நான்!'-சீறும் அசின்

http://thatstamil.oneindia.in/img/2010/06/23-asinfv200.jpg

ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்பதற்காக கண்ணீர்விட்டு அழுபவள் நான் அல்ல, என்று நடிகை அசின் கூறியுள்ளார்.

"காக்க காக்க' படத்தின் இந்தி ரீமேக்கில் ஜான் ஆபிரஹாம் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அசின் கதாநாயகியாக நடிக்கவிருந்தார். ஆனால் திடீரென அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இந்த ஏமாற்றம் தாங்காமல் அசின் கண்ணீர் விட்டு அழுதார் என மும்பை பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒரு படத்தில் நடிப்பதற்கும் நடிக்காமல் இருப்பதற்கும் பல காரணங்கள் இருக்கும். அது அந்தந்த நடிகர், நடிகையின் சொந்த விஷயம். இதற்கெல்லாம் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருப்பார்களா?

ஒரு சினிமா வாய்ப்புக்காக கண்ணீர் விட்டு அழும் சூழ்நிலையில் நான் இல்லை. இந்திப் பட உலகில் என்னுடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் மீடியாவுக்குப் பரப்பிய வதந்திதான் இது. எனக்கான வாய்ப்புகள் எப்போதும் போல உள்ளன. நான் விரும்பும் கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். கிடைப்பதையெல்லாம் ஏற்பதில்லை.

முதலில் அந்தப் படத்தை கெளவுதம் மேனன் இயக்குவதாக இருந்தது. பிறகு நிஷிகாந்த காமத் இயக்குவார் என்றனர். அதையடுத்து கதையிலும் சில மாற்றங்கள் செய்தார்கள்..." என்ற அசின், "இதையெல்லாம் யோசித்துதான் நானே அந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டேன். யாரும் என்னை நீக்கவில்லை...'' என்று ஒரே போடாகப் போட்டார்!

Comments

Most Recent