Kollywood Gossip | Kissu Kissu - அம்மா நடிகை வருத்தம் ,திரும்பிய இயக்குனர்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

மாஜி நடிகையின் வாரிசான நட்சத்திரா, சினிமால நடிக்கிறது நடிகைக்கு பிடிக்கலையாம்... பிடிக்கலையாம்... சினிமா உலகத்துல தான் பட்ட அனுபவத்தை சொல்லியும், வாரிசு
கேக்கலயாம்... கேக்கலயாம்... இதனால ரெண்டு பேருக்கும் மனஸ்தாபமாம். அம்மாவையும் மீறித்தான் நட்சத்திரம் நடிக்க வந்திருக்காராம்... வந்திருக்காராம்...

சர்வமான நடிகரு சொந்தமா படம் தயாரிக்கிறாரு. செலவு
விஷயத்துல ரொம்ப சிக்கனமா இருக்கிறாராம்... இருக்கிறாராம்... செலவு கொஞ்சம் கூடினாலும் புரொடக்ஷன் ஆட்களை லெப்ட், ரைட் வாங்குறாராம்... வாங்குறாராம்... நடிகருக்கு இந்த விஷயத்துல அட்வைசரா இருக்கிறது மில்க் இயக்குனராம்... இயக்குனராம்...

தெலுங்கு தேசத்து ஊர் பேர்ல படம் எடுத்த இயக்குனரு, அதிக சம்பளம் கிடைக்கிறதால தெலுங்கு ஊருக்கே படம் எடுக்க போனாரு... போனாரு... படத்தை ஆரம்பிக்கிறதுல தயாரிப்பு கம்பெனி முதல்ல வேகம் காட்டியதாம். திடீர்னு ஷூட்டிங் ஆரம்பிக்காம இழுத்தடிச்சாங்களாம்... இழுத்தடிச்சாங்களாம்...  அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை ஆயிடக்கூடாதுன்னு தமிழ் பக்கமே திரும்பிட்டாராம்... இயக்குனரு திரும்பிட்டாராம்...

Comments

Most Recent