Kollywood Gossip | Kissu Kissu - நச்சரிக்கும் இயக்குனர்கள் இடம் தேடும் நடிகை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

இசையின் வாரிசான காமெடியின் அன்பு பிடியிலிருந்து கவர்ச்சி நடிகை விலகிட்டாராம்... விலகிட்டாராம்... இப்போ அந்த இடத்தை பிடிச்சிருக்கிறது சின்னத்திரையின் ரம்யமான தொகுப்பாளினியாம்... தொகுப்பாளினியாம்... ரெண்டு
பேரையும் அடிக்கடி ஜோடியா பார்க்க முடியுதாம்... பார்க்க முடியுதாம்... எல்லோர்கிட்டேயும் என் பெஸ்ட் பிரெண்டுன்னு காமெடியை அறிமுகப்படுத்துறாராம்... ரம்யம் அறிமுகப்படுத்துறாராம்...

குஷ்கா நடிகை பெங்களூர்ல ரெஸ்ட்டாரென்ட் நடத்துறாரு. அதே மாதிரி சென்னையிலேயும் ஆரம்பிக்க இடம் தேடுறாராம்... இடம் தேடுறாராம்... இடம் கிடைச்சதும் பிரமாண்டமான ஓப்பனிங் வைக்க தீர்மானிச்சிருக்காராம்... தீர்மானிச்சிருக்காராம்...

விருந்து வைக்கிறவர்னு படம் தயாரிக்குது புது நிறுவனம். இனி வருஷத்துக்கு அஞ்சு படம் தயாரிக்கப்போறோம்னு நிறுவனம் அறிவிச்சிருக்கு... அறிவிச்சிருக்கு... இதை தெரிஞ்சுக்கிட்ட, மார்க்கெட் மழுங்கிக்கிடக்குற இயக்குனருங்க, நடிகருங்க எங்ககிட்ட சூப்பர் கதை இருக்குன்னு கம்பெனியை நச்சரிக்கிறாங்களாம்... நச்சரிக்கிறாங்களாம்... இவங்களை சமாளிக்க முடியாம கம்பெனி தவிக்குதாம்... தவிக்குதாம்...

Comments

Most Recent