Kollywood Kisu Kisu - Shooting stopped as heroine refuses Kissing scene | முத்தக்காட்சிக்கு நாயகி மறுத்ததால் சூட்டிங் நிறுத்தம்!

http://nowrunning.com/content/movie/2009/Ayyanar/stills/ayyanar8.jpg
உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுக்கும் காட்சியில் நாயகி நடிக்க மறுத்ததால் புதுப்படம் ஒன்றில் சூட்டிங் நிறுத்தப்பட்டது. முத்தக்காட்சியில் தொடங்கி, படுக்கையறை காட்சி, நீச்சல் உடை நடனம் என எந்த காட்சியானாலும் மறுப்பேதும் சொல்லாமல் நடித்துக் கொடுக்கும் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகைகளுக்கு மத்தியில் புதுமுகமாக அறிமுகமாகவிருப்பவர் நடிகை அர்ச்சனா. ஏ ஒன் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் சாந்தி படத்தின் நாயகியாக புதுமுகம் அர்ச்சனா நடித்து வருகிறார். மும்‌பையை சேர்ந்த அர்ச்சனாவுக்கு ஜோடியாக மகா ஆதித்யா என்ற புதுமுகம் நடிக்கிறார். புதியவர் முரளி விஷ்வா இயக்குகிறார்.

படத்தின் கதைப்படி, நாயகி அர்ச்சனாவின் அழகில் மயங்கும் நாயகன் காதலில் விழுகிறார். தனது காதலை காதலி ஏற்றுக் கொண்ட சந்தோஷத்தில் அவருக்கு உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுக்கிறார் நாயகன். இந்த காட்சி சென்னை மெரினா கடற்கரையில் படமாக்கப்பட்டது. முதலில் முத்தக்காட்சியில் நடிக்க சம்மதித்த அர்ச்சனா, பின்னர் ஏனோ நடிக்க மறுத்து விட்டார். கதைக்கு இந்த காட்சி அவசியம் என்று டைரக்டர் விளக்கிக் கூறியும் அர்ச்சனா நடிக்க மறுத்து டிட்டார். இதையடுத்து சாந்தி படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. முத்தக்காட்சியில் நடிக்க மறுப்பதால் வேறு நாயகியை நடிக்க வைக்கலாமா? என்ற யோசனையில் மூழ்கியிருக்கிறது சாந்தி படக்குழு.

Comments

Most Recent