நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... எனக்கு வர வேண்டிய வில்லி வேடத்தை, நமீ நடிகை தட்டிப் பறிச்சுட்டாருனு மணக்கும் மான் நடி...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
எனக்கு வர வேண்டிய வில்லி வேடத்தை, நமீ நடிகை தட்டிப் பறிச்சுட்டாருனு மணக்கும் மான் நடிகை புலம்புறாராம்... புலம்புறாராம்... பதிலுக்கு 'கூந்தல் இருக்குறவ அள்ளி முடியுறா. இவருக்கென்ன வயித்தெரிச்சல்'னு நமீ நடிகை பதில் கமென்ட் அடிக்கிறாராம்... அடிக்கிறாராம்...
பெரிய காமெடிகளுக்கு துணையா நடிக்கிற சின்ன காமெடிகளுக்கு சம்பளம் ரொம்ப குறைவாம்... குறைவாம்... இதனால அவங்க சீக்ரெட் மீட்டிங் போட்டு பேசினாங்களாம்... பேசினாங்களாம்... சீக்கிரமே சங்கத்து கதவை தட்ட இருக்காங்களாம்... இருக்காங்களாம்...
குட்டி தளபதி பட்டம் போட்ட பின், நடிச்ச படம் எதுவும் போணியாகல. அந்த பட்டத்தை தூக்கிரலாம்னு காதல் நடிகர் முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்... சமீபத்துல ஜோதிடர் ஒருத்தரை சந்திச்சாராம். இது, அந்த ஜோதிடர் சொன்ன யோசனையாம்... யோசனையாம்...
Comments
Post a Comment