Kollywood Kisu Kisu - நடிகைக்கு நிச்சயதார்த்தம் பட செலவு பிரச்சனை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPP6ODgjsLBa0rRLpKt7_iWFFzbwpKwvG4-Gxk_8jemhMJKALCFKZgHalQ5YudZUuHR5vKI8zS0OvARrSX0T-SMDVOsVBKc940e2yYSfnHS_s0uBSDWIGRWhyTSrs_RfY26ADXEYm5p_FM/s320/gossip_kisu_kisu.jpg
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

யாரோடும் காதல் இல்லேனு கற்பூரம் ஏத்தி சத்தியம் பண்ணாத குறையா சொன்னாரு சாருமியான நடிகை. சமீபத்துல பஞ்சாப்ல இருக்கிற கோயிலுக்கு பாய்பிரெண்டோடு போய் வந்தாராம்... வந்தாராம்... சீக்கிரமே நிச்சயதார்த்தம் நடக்கும்னு நடிகைக்கு நெருங்கியவங்க சொல்றாங்க...
சொல்றாங்க...

தவுசண்ட்ல ஒருத்தன் பட செலவை படிப்படியா உயர்த்தியவரு செல்வமான இயக்குனரு. இப்போ அவரோட அடுத்த படத்துக்கும் அதே நிலமை வர்ற மாதிரி இருக்காம்... இருக்காம்... திரும்ப சரித்திர படம் இயக்குறேன்னு தெலுங்குக்கு போயிருக்காரு. அந்த படத்துக்கு முன்னாடி சொன்ன செலவு வேறயாம். இப்போ ஷூட்டிங் நெருங்கிற நேரத்துல காட்டுற கணக்கு வேறயாம். தயாரிப்பு நொந்து போயிருக்காராம்... போயிருக்காராம்... சுமுகமா பேசி முடிவு பண்ணலாம்னு பேசிட்டு இருக்காங்களாம்... இருக்காங்களாம்...

ஹீரோ ஆகிற டைரக்டர்களோட லிஸ்ட் அதிகரிச்சிட்டே போகுது. சக்ஸஸ் கிங் இயக்குனருக்கும் அந்த ஆசை ரொம்ப நாளா இருந்துச்சு. அடுத்த வருஷம் ஹீரோ வேஷம் போடப்போறாராம்... போடப்போறாராம்... அதுக்கு இப்பவே மும்முரமா கதை கேட்கிறாராம்... கேட்கிறாராம்...

Comments

Most Recent