Mani makes it clear | ராவணன் விவகாரம்: அமிதாப் கருத்துக்கு மணிரத்னம் பதில்!!

ராவணன் படம் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்த அமிதாப் பச்சனுக்கு டைரக்டர் மணிரத்னம் பதில் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் ராவணன் படத்தை உருவாக்கி திரையிட்டிருக்கிறார் டைரக்டர் மணிரத்னம். இப்படத்தின் இந்தி பதிப்பில் நடிகர் அபிஷேக் பச்சன் முக்கிய ரோலில் நடித்திருந்தார். படத்தை பார்த்த அபிஷேக்கின் தந்தையும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன், படத்தில் அபிஷேக் தொடர்பான பல காட்சிகள் வெட்டப்பட்டு விட்டன. இதனால் படம் முழுக்க குழப்பமாகவே இருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்திருந்தார்.

அமிதாப்பின் அதிருப்திக்கு டைரக்டர் மணிரத்னம் பதில் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், `அமிதாப்பச்சன் தனது கருத்தை சொல்லியிருக்கிறார். அவர் இணையதளத்தில் சொன்ன கருத்தை, என்னிடமே போனில் சொல்லியிருக்கலாம். என் செல் நம்பர் அவருக்கு தெரியும். பொதுவாக ஒரு படத்தை பற்றி கருத்து சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எப்போதுமே ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன். அதேபோல ரசிகர்களின் கருத்தைத்தான் எடுத்துக் கொள்வேன், என்றார்.

ராவணன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக கூறிய மணிரத்னம், ரசிகர்கள் தியேட்டருக்குள் வந்தவுடன் 6வது நிமிடத்திலேயே கதையுடன் ஒன்றி விடுகிறார்கள். ரசிகர்களும், ரசனையும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. இங்கு ரசிக்கிற காட்சிகளைத்தான் மும்பையிலும் ரசிக்கிறார்கள், என்று கூறியுள்ளார்.

Even as a controversy is brewing over Mani Ratnam’s interpretation of ‘Ramayanam’ in his recent release ‘Raavanan’, the director has said he never wanted to glorify Raavanan, the villain of the epic, in his film.
“My movie is about a mighty man whose behaviour is due to different attitudes that strike his mind to adopt for a situation. It’s like 10 different persons sitting inside one man. Hence the title”, the ace filmmaker clarified.
Meanwhile, Bollywood veteran Mahesh Bhatt came to the support of Amitabh Bachchan, who expressed unhappiness over the editing of the film’s Hindi version ‘Raavan’ which has his son Abhishek Bachchan in the lead.
“A dad is a dad is a dad. Who else would come out but a father to protect his son from fires of perceived failure?” the filmmaker said. In the meantime, amidst reports that the movie has bombed at the box office, distributor Reliance Big Pictures has claimed that the film has grossed Rs 53 crore worldwide with in three days of its release.

Comments

Most Recent