ஒரு விநாடியில் 13 ஆயிரம் பிரேம்கள் படம் பிடிக்கும் நவீன கேமரா சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான பேந்தோம் ...
ஒரு விநாடியில் 13 ஆயிரம் பிரேம்கள் படம் பிடிக்கும் நவீன கேமரா சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான பேந்தோம் நிறுவனம், தற்போது பேந்தோம் ப்ளக்ஸ் என்ற நவீன சினிமா கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேமராவை சென்னையில் உள்ள ஸ்டீரியோவிஷன் நிறுவனம், தமிழ் திரைப்பட இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு செய்முறை விளக்கம் செய்து காட்டியது. பின்னர் ஸ்டீரியோவிஷன் நிர்வாக இயக்குனர் சம்தானி நிருபர்களிடம் கூறியதாவது: இந்த நவீன கேமரா, விநாடிக்கு 5 பிரேம் முதல் 13 ஆயிரம் பிரேம் வரை படம் பிடிக்கக்கூடியது. திரைப்படங்களில் சண்டை, கார் சேசிங், நுட்பமான காட்சிகளுக்கு பயன்படுத்தலாம். முழு திரைப்படத்தையும் இந்த கேமராவைக் கொண்டு உருவாக்கலாம். ஸ்லோமோஷன் எனப்படும் சிறப்பு காட்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்த இந்த கேமரா பயன்படும். சமீபத்தில் வெளிவந்த ஹாரி பார்ட்டர், ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இந்த கேமரா பயன்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment