50 முறை கதை கேட்ட களவாணி தயாரிப்பாளர்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhioMPaYHVr1AS2-x4y_YY8uOT-rgpFLGLDR-RH3Z-JY5-wuinXosX87bQajedUl5kTan2cEU5Ue0AFHsaPXuQ-ShTZoGIfdOxm9i9z1t4KXyKO-s2QumjlBS09go1gqMFCwv49efAxPis/s400/kalavaani+movie+mp3+song.jpeg
சமீபத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்டு வரும் களவாணி படத்தின் இன்று தமிழ் திரையுலகினராலேயே பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்த வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முக்கியமான காரணம் புதுமுக இயக்குனர் ஏ.சற்குணத்தில் விடாமுயற்சியும் கூட! பல தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை சொல்லி பட வாய்ப்பு கிட்டாமல் போனால் ‌கூட தளர்ந்து போகதாத சற்குனம், களவாணி படத்தின் தயாரிப்பாளர் ஷெர்லி பிலிம்ஸ் நஷீரிடம் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறைகள் நம்பிக்கை தளராமல் கதா சொல்லி இந்த பட வாய்ப்பை பெற்றிருக்கிறார். இப்படத்தை நான் ஆரம்பிக்கும் முன் அத்தனை முறை கதை கேட்டும், சளைக்காமல் சொன்னார் சற்குணம். அதுதான் இத்தகைய சாதனை என்று சர்டிபிகேட் தருகிறார் நசீர். தயாரிப்பாளர் நசீர் மணிரத்னத்தின் மாஜி காரியதரிசி! சற்குணம், கிரீடம் விஜய்யின் உதவியாளர். மணிரத்னத்தின் ராவணன், விஜய் இயக்கத்தில் மதராச பட்டினம் இரண்டும் களவாணி ரீலிஸ் தருணத்திலேயே ரீலிஸ் ஆகியும் களவாணிக்கு கிடைத்த வெற்றி பெரிய வெற்றிதான் என பாராட்டுகிறது திரையுலகம்! வாவ்!!

Comments

Most Recent