அம்பானி ஆகிறார் கருணாஸ்

http://www.grantimage.com/out.php/i6432_aa-00-artpage.jpg 
சந்தோஷ சிகரத்தின் உச்சியில் இருக்கிறார், கருணாஸ். ஹீரோவாக நடித்துள்ள 2&வது படமான 'அம்பாசமுத்திரம் அம்பானிÕ, நாளை ரிலீஸ்.
'சன் பிக்சர்ஸ் வழங்கிய 'திண்டுக்கல் சாரதிÕ மூலம் ஹீரோவானேன். உலகிலுள்ள மூலை முடுக்குகளுக்கு எல்லாம் என்னை அப்படம் கொண்டு போய் சேர்த்தது. அதன் மிகப் பெரிய வெற்றி, 'அம்பாசமுத்திரம் அம்பானிÕயில் ஹீரோவாக நடிக்க உதவியாக இருந்தது. தைரியத்தையும் கொடுத்தது. பாடகர், நடிகர், விநியோகஸ்தர், இசையமைப்பாளர் என பல பொறுப்புகளை திறம்பட செய்த நான், இப்படத்தை கென் மீடியா மூலம் தயாரித்து, தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தும் பெற்றேன். வெளிநாடுகளில் நாளை 15 பிரின்ட்டுகள் ரிலீஸாகிறது. இந்த சாதனைக்கு காரணம், சன் பிக்சர்ஸ் எனக்கு அளித்து வரும் ஆதரவுதான்.

படத்தில் நான் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த தண்டபாணி என்ற இளைஞன். அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவன், அம்பானி ஆக ஆசைப்படுகிறேன். அது எப்படி சாத்தியம் என்பது கிளைமாக்ஸ். என் மனைவியாக நவ்னீத் கவுர் நடிக்கிறார். ரகசியா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். எனது இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். ராம்நாத் இயக்குகிறார். புலித்தேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை பார்த்த சென்ஸார் குழுவினர், 'நகைச்சுவையுடன் ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறது இப்படம்Õ என பாராட்டி, யூ சான்றிதழ் அளித்துள்ளனர்.இப்படத்தின் விளம்பரத்துக்காக
மலேசியா சென்றிருந்த போது, 50 ஸ்போர்ட்ஸ் கார்கள் அணிவகுக்க ஊர்வலமாக சென்றேன்Õ என்றார் கருணாஸ்.

Comments

Most Recent