தூர்தர்ஷனில் சத்தமின்றி அசத்தும் ஆக்ஷன் சீரியல்

http://www.dishtracking.com/blog/wp-content/uploads/2009/08/Doordarshan.png
வழக்கமான டி.வி., சீரியல்களில் இருக்கும் அழுகை, சென்ட்டிமெண்ட், வழக்கமான திரைக்கதை போன்ற சீரியல் தன்மைகளை உடைத்து, அதிரடியாகவும் படு சுறுசுறுப்பாகவும் திரைக்கதையுடன் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிறது, எமர்ஜென்ஸி ஆக்ஷன் என்னும் சீரியல். 100வது வாரத்தை நெருங்கும் இந்த திரில்லர் தொடரை, பிரபல செய்தி வாசிப்பாளர் சோபனா ரவியின் சகோதரர் ரத்தீஸ் அய்யர் இயக்குகிறார். இந்த சீரியலில் நடிகர் நிழல்கள் ரவி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் அசத்தலாக நடித்துள்ளார். அவருடன் மாடலிங் துறையை சேர்நத பலரும் நடிக்கின்றனர். வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7.00 மணிக்கு இந்த எமர்ஜென்ஸி ஆக்ஷன் சீரி்யல் ஒளிப்பரப்பாகிறது.

Comments

Most Recent