விவேக் ஓபராய் நடித்திருப்பதால் ரத்த சரித்திரம் படத்தை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வெளியிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர் சிலர...
விவேக் ஓபராய் நடித்திருப்பதால் ரத்த சரித்திரம் படத்தை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வெளியிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர் சிலர். ஆனால் ரத்த சரித்திரத்தை வாங்குவதில் ஒரு போட்டியே நடக்கிறது. குறிப்பாக படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமைக்கு. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கான விநியோக உரிமை 4.5 கோடிக்கு விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யா நடித்த ஒரு படம் இத்தனை அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், படத்தின் இயக்குனர் ராம் கோபால் வர்மா ‘ரத்த சரித்திரம்’ படத்தை அமிதாப்பிற்கு போட்டு காண்பித்தார். படத்தை பார்த்த அமிதாப் சூர்யாவின் நடிப்பை ராம் கோபால் வர்மாவிடம் வெகுவாக பாராட்டினார். கதாபாத்திரத்தை உணர்ந்து, தனது நடிப்பை முழுமையாக வெளிகாட்டி அனைவரது பார்வையும் தன் பக்கம் திரும்ப செய்துள்ளார் சூர்யா என அமிதாப் சூர்யாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். சூர்யாவை பாராட்டிய அமிதாப் சூர்யாவுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Comments
Post a Comment