பிரபல மலையாள நடிகை காவ்யாமாதவன். இவர் தமிழில் காசி, என் மன வானில், சாது மிரண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நா...
பிரபல மலையாள நடிகை காவ்யாமாதவன். இவர் தமிழில் காசி, என் மன வானில், சாது மிரண்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நாயகியாக இருந்தவர்.
இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குவைத்தில் பணிபுரியும் நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டு கணவருடன் குவைத்தில் குடித்தனம் நடத்தினார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே விவகாரத்து கேட்டு அனைவரையும் அதிர வைத்தார்.
பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந் நிலையில் காவ்யா மாதவன் தன்னையும், தன் குடும்பத்தாரையும் பற்றி அவதூறாக பேசி வருவதாக நிஷால் புகார் கூறினார். எனவே, காவ்யா மாதவன் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்கும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து, எர்ணாகுளம் முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று காவ்யா தாக்கல் செய்த மனுவில் நிஷாலும், அவர் குடும்பத்தினரும் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார்.
மீண்டும் காவ்யா விவகாரம் சூடு பிடித்திருப்பதால் மலையாளத் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment