நடிகை குத்து ரம்யாவுக்கு அடிக்கடி ஒரு எண்ணிலிருந்து ஆபாச எஸ்.எம்.எஸ். வருகிறதாம். இதனால் கோபமடைந்துள்ள அவர் போலீஸை அணுகப் போவதாக கூறுகிறா...
நடிகை குத்து ரம்யாவுக்கு அடிக்கடி ஒரு எண்ணிலிருந்து ஆபாச எஸ்.எம்.எஸ். வருகிறதாம். இதனால் கோபமடைந்துள்ள அவர் போலீஸை அணுகப் போவதாக கூறுகிறார்.
குத்து படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான கன்னட நடிகை ரம்யா. இதனால் அவருக்கு குத்து ரம்யா என்று பெயர் வந்தது. தற்போது திவ்யா என தனது ஒரிஜினல் பெயருக்கு மாறி விட்டார். இருந்தாலும், எல்லோருக்கும் இவரை குத்து ரம்யா என்றால்தான் தெரிகிறது.
தற்போது தமிழில் காதல் 2 கல்யாணம் என்ற படத்தில் நடித்து வருகிறார் ரம்யா. இந்த நிலையில், அவருக்கு அடிக்கடி ஒரு நபர் ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகிறாராம்.
அவரது அங்கங்களை அதில் வர்ணிக்கும் அந்த ஆசாமி, அவரது இருப்பிடத்தை அறிந்து கொண்டு அடிக்கடி அதுகுறித்து எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறாராம். அவரது நடமாட்டத்தை அருகில்இருந்து கண்காணிக்கும் ஒரு நபர்தான் இப்படி அனுப்பி அவரை டென்ஷனாக்க வேண்டும் என்று தெரிகிறது.
இந்தத் தொல்லை 2 மாதங்களாக தொடர்கிறதாம். ஆனாலும் இதுவரை இதுகுறித்து மூச்சுக் கூட விடாமல் இருந்து வந்த ரம்யா இப்போதுதான் இதுகுறித்து பேச ஆரம்பித்துள்ளார். தொல்லை நிற்கும் வழி தெரியாததால் போலீஸை அணுகப் போவதாக அவர் கூறியுள்ளார்.
போலீஸ்காரர்கள் நாலு 'குத்து' விட்டால்தான் இப்படிப்பட்ட ஆட்கள் சரிக்கு வருவார்கள்!

Comments
Post a Comment