நாம் தமிழர் அமைப்பு என்று கூறி தன்னை சிலர் தொடர்ந்து மிரட்டுவதாக கூறியுள்ள நடிகர் கருணாஸுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது ...
நாம் தமிழர் அமைப்பு என்று கூறி தன்னை சிலர் தொடர்ந்து மிரட்டுவதாக கூறியுள்ள நடிகர் கருணாஸுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு தான் செல்லவிருப்பதை எதிர்த்தும், அங்கு போகக் கூடாது என்று கூறியும் நாம் தமிழர் அமைப்பினர் என்று கூறி சிலர் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இதை கண்டு நான் அஞ்சப் போவதில்லை என்றும் நடிகர் கருணாஸ் கூறியிருந்தார். இதுதொடர்பாக அவர் போலீஸிலும் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும், சென்னை திருமங்கலத்தில் உள்ள கருணாஸின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment