ஒரு பாட்டுக்கு ஆடுவதில் என்ன தப்பு?அனுஷ்கா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒரு பாட்டுக்கு ஆடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று அனுஷ்கா கூறினார்.
சிம்பு நடிக்கும், 'வானம்' படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் அனுஷ்கா. அவருக்கு சம்பளமாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அனுஷ்கா கூறியதாவது:'ஒரு பாட்டுக்கு ஏன் ஆடுகிறாய்? ஹீரோயினாகவே தொடர வேண்டியதுதானே' என்கிறார்கள் தோழிகள். இதில் என்ன தவறு இருக்கிறது? உலக அழகி ஐஸ்வர்யா ராய் பல படங்களில் நடித்திருந்தாலும் அவர் ஒரு பாட்டுக்கு ஆடிய, 'கஜ்ராரே' என்ற இந்தி பாடல் இன்னும் ரசிகர்களின் மனதில் நிற்கிறது.
ஒரு பாட்டுக்கு ஆடுவது தான் ரசிகர்களிடம் அதிகமாக கொண்டு சேர்க்கிறது. தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'ஸ்டாலின்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனது மனநிலைக்கு எது ஒத்துவருகிறதோ அதை செய்கிறேன். எனக்கு எது நல்லதென்று தெரிகிறதோ அந்த கேரக்டர்களில் நடிக்கிறேன். ஆடுகிறேன். இதில் மற்றவர்களின் கருத்துகள் பற்றி கவலை இல்லை.
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

Comments

Most Recent